Wednesday, December 10, 2014

வாழ்த்துக்கள்!!!

ரஞ்சி டிராபியில் ஜம்மு & காஷ்மீர் மும்பையை தோற்கடித்தது என்பதுதான் இன்றைய  இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டின் முக்கிய செய்தி.

முதலில் நமது வாழ்த்துக்களை ஜம்மு & காஷ்மீர் டீமுக்கு தெரிவித்துக்கொள்வோம்.

இதையொட்டி ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நிறைய விவாதங்கள்.மும்பையில் நல்ல வீரர்கள் இல்லை முக்கிய வீரர்கள் சோபிக்கவில்லை என. அதில் எனக்கு பெரிய அக்கறையில்லை.

இருமாதங்களுக்கு முன் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் மைதானம் முற்றிலுமாக அழிந்துவிட்டது. அவர்களுக்கு பயிற்சி எடுக்கக்கூட மைதானம் இல்லை. ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் போர்டிடமும் பெரிய பணபலமும் இல்லை. இந்த சூழ்நிலையிலும் அவர்கள் வென்றிக்கிறார்கள்.

இந்த வெற்றிச்செய்தி நாளைய  ஜம்மு காஷ்மீர் செய்தித்தாள்களில் முதல் பக்கத்தில் வரலாம். தேர்தல் செய்திகளை தாண்டி இது முக்கிய இடம்பெரும் என நம்புகிறேன். கிரிக்கெட் பிரியர்களும் இளைஞர்களும் இதைப்பற்றி பேசலாம்.

கிரிக்கெட். இந்தியாவில் அரசியில் சினிமாவை தாண்டி அதிகம் பேசப்படும் பார்க்கப்படும் விஷயம். இந்தியாவை இணைக்கும் ஒரு முக்கியமான கருவி. அந்த சங்கமத்தில்  ஜம்மு காஷ்மீர் இணைவது மிகவும்  நல்ல விஷயம். அவசியமும் கூட. பர்வேஸ் ரசூல் இந்திய அணியில் இடம்பெற்றதை இதனுடன் பொருத்திப்பார்க்கலாம். அவர் நல்ல வீரரா இல்லையா என்பதை விட தேசிய அணியில் இடம்பெற்றதே பெரிய விஷயம். ஒரு வீரராவது  இந்திய அணியில் நிரந்த இடம்பிடிக்க வேண்டும்.

ஜம்மு கஷ்மீரில் ராணுவ ஊழலும் பிரிவினைவாதிகள் என்ற பெயரில் இயங்கும் அரசியல்வாதிகளையும் பழமைவாதிகளையும் தாண்டி அவர்கள் இந்தியாவுடன் கைகோர்த்து நடக்க கிரிக்கெட்டும் கூட உதவலாம். இப்போதைக்கு காங்கிரஸ் என்ற சொல்லைத்தாண்டி இந்திய முழுக்க அனைவருக்கும் தெரிந்த வார்த்தை என்றால் அது கிரிக்கெட் தான். கிரிக்கெட்டினால் என்ன நன்மை என்று கேட்டால் எதுவும் இல்லைதான். ஆனாலும் அது நமது சுவாசத்தில் கலந்த ஒன்று.

அவர்கள் இந்தியாவுடன் இணைந்திருக்க வேண்டும் என்றால் முதலில் நாம் அவர்களை இணைத்துக்கொள்ள வேண்டும். இது வடகிழக்கு மாநிலங்களுக்கும் பொருந்தும். தொழில் செய்ய படிக்க விளையாட என மக்கள் வருவதும் போவதும் அதிகம் நிகழ வேண்டும். அதற்கு நிலைமை இன்னும் நிறைய மாறவேண்டும். அரசியல் தளத்தை தாண்டி மற்ற எல்லா தளங்களிலும் மாற்றம் அவசியம்.

 கடந்த பட்ஜெட்டில் ஜம்மு கஷ்மீரில் ஐஐடி அமைக்கப்போவதாக மத்தியரசு அறிவித்துள்ளது. அதைப்போலவே வடகிழக்கு மாநிலங்களுக்கும் சாலைகள் அமைக்க அதிக நிதி ஒதிக்கீடு செய்துள்ளது. ரயில் வசதிகளும் அமைய இருக்கின்றன. இதெல்லாம் தான் இணைப்பு பாலங்கள்.

பொறுத்திருந்து பார்போம். மீண்டும் ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணிக்கு நமது வாழ்த்துக்கள்.





1 comment:

  1. Good Thought...Different perspective ...way to go....valthukal :)

    ReplyDelete